மரடோனா மர்மம்

பிரேசில் நாட்டில் காற்று மழையோடு கூடிய ஓர் இருண்ட இரவு. கால்பந்து வரலாறில் புகழ் பெற்ற இருவர் திடீரென உள்ளே வந்தனர். வந்தவர்கள் நேமர் மற்றும் மரடோனா!  அங்கிருந்த ரசிகர்கள் புகைபடம் மற்றும் கையெழுத்து கேட்டனர்.இடையில் சத்தமில்லாமல் ஒரு மர்ம நபர் தொலைக்காட்சி சானலை பிரேசில் ஜனாதிபதியின் வீட்டை நோக்கி திருப்பிவிட்டான். பிறகு அவன் கோப்பை அறையில் இருந்த கால்பந்து தங்க கோப்பையைத் திருடிச் சென்றான்!என் பெயர் ஆதவன். நான் இந்தியாவில் வசிக்கிறேன். என் அப்பா காவல்துறை யில் ஒரு உயரதிகாரி. எனது அம்மா இஸ்ரோவில் விஞ்ஞானி யாக பணிபுரிகிறார். எனக்கு ஒரு குறும்புகார தங்கை இருக்கிறாள். நாங்கள் இந்த ஆண்டு உலககோப்பை கால்பந்து விளையாட்டை பார்க்க வந்து இருக்கிறோம்.என் அப்பாவின் நண்பர் சோமசுந்தரம், பிரேசில் காவல்துறை அதிகாரி . அவர் அப்பாவிடம் பிரேசில் காவல்துறைக்கு உதவுமாறு கேட்டார் . அதற்கு அப்பா நானா? எதற்கு? என்றார். அவர் அப்பாவிடம் கோப்பை தொலைந்த செய்தியை  சொன்னார். அப்பா ” கோப்பை தொலைந்து விட்டதா ?” என அதிர்ச்சியுடன் வினவினார் . ஏதோ உலகமே ஒரு முடிவுக்கு வந்து விட்டதை போல.நாங்கள் பார்த்த முதல் போட்டி நெதெர்லாண்டுகும் ஸ்பெயினுக்கும் நடுவே நடந்தது. வான்பெர்சி ஸ்பெயினின் கோலியை கடுமையாக பதம் பார்த்தார். நெதர்லாண்டு  அபார வெற்றி பெற்றது. வான்பெர்சிக்கு அருகில் ஒரு கோழி வந்து நின்றது. அதன் கழுத்தில் ஒரு துண்டுச் சிட்டு இருப்பதை அப்பா கவனித்தார்.என் அப்பா காவல்துறை இடம் அந்த துண்டுச்சீட்டை கொடுத்தார். அதில் “இன்னும் மூன்று ஆட்டங்களுக்கு கோழியின் மூலம் செய்திகள் வரும், நான் யார் என்று பிறகு தெரியும்” என்று எழுதி இருந்தது.அடுத்த நாள் உருகுவே இத்தாலி போட்டி நடந்து கொண்டடி  ருந்தது. அப்பொழுது உருகுவே ஆட்டக்காரர் சுவாரெஸ் இத்தாலி வீரரை கடித்தார். அதைப் பார்த்து நானும் அப்பாவும் வயிறு வலிக்கச் சிரித்தோம். மீண்டும் கோழி கோல் கம்பத்திற்கு அருகில் வந்தது. அதன் கழுத்தில் இருந்த சீட்டில் “நான்தான் மரடோன” என்று இருந்தது. அனைவரும் அர்சன்டினா வீரர் மரடோனாவா கோப்பையை திருடியது ?” என்று நினைத்தனர்.நானும் அப்பாவின் காவல்துறை நண்பருடன் ஆர்ஜென்டினாவிற்கு விரைந்தோம். மரடோனாவின் வீட்டை அடைந்தோம். “மரடோனா ! உலகக்கோப்பையை திருடியதற்காக உங்களை கைது செய்கிறோம்” என காவல்துறை அதிகாரி கூறினார். “என்ன? எனக்கு ஒன்றும் தெரியாது” என மரடோனா பதில் கூறினார்.நீங்கள் என் வீட்டை சோதனை செய்து பாருங்கள் என்றார் மரடோனா. வீட்டை சோதித்ததில் 1986 உலகக்கோப்பை மட்டுமே இருந்தது. அது அர்ஜென்டீனா வெற்றிப் பெற்றதற்கு கொடுத்தது. யாரோ நம்மை திசை திருப்பிவிட்டனர் என அப்பா கோபமாக கூறினார்.கானா ஜெர்மனி இடையேயான போட்டியை பார்த்தோம். அதில் கானா கோல் அடித்தது. கானா வீரர்கள் உற்சாகமாக நடனம் ஆடினார்.அவர்களை பார்த்து கழுத்தில் துண்டுச் சீட்டுடன் கோழி ஆடியது. இந்த முறை வந்த செய்தி “நான் ரியோவில் இருகிறேன்”. “இது உதவாத தடையம்” என்றார் அப்பா.நெதர்லாந்த் அர்ஜென்டீனா அறையிறுதியில் மோதியது. அர்ஜென்டீனாவின் பயிற்சியாளர் மயங்கி விழுந்தார். அவருக்கு அருகில் மறுபடியும் கோழி! இந்த முறை கொண்டு வந்த செய்தி “நான் ரசில்அவென்யுவில் இருக்கிறேன்”. உடனே காவல்துறை அந்த இடத்தை தேடினர்.அந்த பெயரில் ஒரு தெருவே இல்லை என காவல்துறை திகைத்தது. அப்பொழுது அம்மாவிடமிருந்து போனில் ஒரு செய்தி வந்தது. “நான் பிரேசில் அவேன்யூவில் உள்ள kfc இல் இருக்கிறேன். ஆதவனும் நீங்களும் வந்தால் ஒன்றாக சேர்ந்து சாப்பிடலாம்” என்று தகவல் அனுப்பினார்கள். அப்பாவின் மனதில் சட்டென ஒரு எண்ணம் தோன்றியது.“குற்றவாளி பிரேசில் அவென்யூவில் இருக்கலாம்! உடனே அங்கு செல்லலாம்” என்றார் அப்பா. அங்கு ஒரு வீட்டின் முன்னே ஒருவன் கோழிகளுக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தான். வீட்டின் முன்னே மரடோனா இல்லம் என்று பலகை இருந்தது. வசமாக சிக்கினான் மரடோனா!! அவன் வீட்டிலிருந்து தொலைந்து போன தங்க கோப்பை கிடைத்தது.அதை திருடியதற்கு அவன் சொன்ன காரணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவன் நண்பர்கள் புதிதாக சிக்கன் பக்கெட்டுகளை தானமாகத் தருவதாக சவால் விட்டான். அதை நிறைவேற்ற கோப்பையை திருடினான். தங்ககோப்பையை தேடிக்கொடுத்த மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பினோம்!! –முடிவு– — முடிவு —
Click to Read an Interactive version of this story here