மரம் வளர்ப்போம்!

இது மீராவின் ஊர்!அவளுடைய ஊர் ஒரு வண்ணமயமான கிராமம். மீரா அவள் வீட்டைச் சுற்றி மரங்களையும் கொடிகளையும் வளர்த்தாள்.இதைப் பார்த்து அவள் கிராமத்தில் இருக்கும் பெரியோர்களும், சிறியோர்களும் மரங்களையும் கொடிகளையும் வளரத்தனர்.இதனால் அந்த கிராமமே வண்ணமயமாக இருக்கிறது.இது மலயாவின் ஊர்.  மலயா ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தாள்.மலயாவின் ஊரில் மரங்களே இல்லை.இதனால் அவள் நகரம் மாசுபட்டது.மலயாவும், மீராவும் நண்பர்கள். அவர்கள் இரண்டு பேரும் இரட்டையர்கள் போன்று.இன்றைக்கு இருவரும் பள்ளிக்கு சென்றார்கள்.பள்ளியில் நன்றாக படித்து முடித்ததும் இருவரும் மலயாவின் வீட்டிற்க்கு சென்றார்கள்.இருவரும் நகரத்துக்கு சென்றார்கள்.

இருவரும்  நகரத்துக்கு  சென்றார்கள்.மீரா அந்த நகரத்தை பார்த்து மயங்கினாள். “ஏன் இந்த நகரம் இப்படி மாசுபட்டுருக்கிரது?” என்று கேட்டாள்.  அதற்க்கு மலயா “என்ன செய்வது?” என்று புலம்பினாள்.மீராவிற்க்கு ஒரு யோசனை தோன்றியது.மீராவும், மலயாவும் நகரத்தில் இருக்கும் எல்லோரையும் மரங்கள் வளர்த்த  வழியுரித்தினார்கள்.சில மாதங்களுக்கு பிறகு மலயாவின் நகரமே மறுமலர்ச்சி பெற்றது.


Click to Read an Interactive version of this story here